சங்கராபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் உழைப்பாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளுமை விருது வழங்கி முப்பெறும் விழா..!
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மே தின நிகழ்ச்சி உழைப்பாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளுமை விருது வழங்குதல் என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் ஆசாத் அலி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சையத் கவுஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ்தீன், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொருளாளர் அக்பர் நகரச் செயலாளர் சையத் ரஷீத், சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் ஷாநவாஸ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஆளுமை விருது வழங்கப்பட்டது. ஆளுமை விருதினை டவுன் லயன்ஸ் கிளப் தலைவர் சலீம் ஜான் அவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மண்டல செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் வழங்கி, மே தினத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
அதன்பின்பு பத்திரிக்கையாளர்கள் ராமு,முஸ்தபா, சரவணன், இளையராஜா, பாபு, தினேஷ், ச.கா.இளையராஜா, விக்னேஷ்,சஞ்சய் காந்தி, மாரிமுத்து, ரவி, லோகு,சவுக்கத் அலி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அதனை தொடர்ந்து உழைப்பாளர்களின் சிறப்புகளை குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி மற்றும் வழக்கறிஞர் தமிழ்குமரன் ஆகியோர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் தலித்சந்திரன், சிந்தனைவளவன், சமூக ஆர்வலர்கள் கெளஸ் ஷெரிப், அபுல்கலாம், டாக்டர் ஆரிப்,குல்ஷார்ஷா, தஸ்தகீர்,இலியாஸ்,சரத்குமார், இனாயத்துல்லா, கண்ணன், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இறுதியாக தொகுதி பொருளாளர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.
செய்திகள் செ.பிரபு
0 Comments