மணப்பாறையில் பூட்டிய வீட்டில் கொள்ளை..!
திருச்சி மாவட்டம், மணப்பாறை பட்டி சாலை ஐயப்பன் கோயில்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50) அரசு பேரூந்து மெக்கானிக்காக கரூரில் பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி மணப்பாறை துணி கடையில் வேலை செய்து வருகின்றனர். மகள் திருச்சி சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகிறார். இன்று காலை மூன்றுபேரும் வேலைக்கு செல்லவேண்டி வீட்டை பூட்டிவிட்டு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பிய நிலையில் வீடு திறந்திருப்பதை கண்ட சுப்பிரமணி மணப்பாறை காவல் நிலையத்தி புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வீட்டில் பிரோவில் இருந்த 81/2 பவுன், சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் திருடுபோனது தெரியவந்தது பின்னர் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மா) செய்தியாளர்
S.K. சபியுல்லா
0 Comments